Home செய்திகள் Archive by category சினிமா (Page 324)

சினிமா

சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் வேண்டாம் – இயக்குநர் ஷங்கர் அதிரடி

ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன்
சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அப்பாவின் பெருந்தன்மை

1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம்
சினிமா செய்திகள் நடிகை

நடிகை சதா எடுத்த துணிச்சலான முடிவு

அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம்
சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு
சினிமா செய்திகள் நடிகர்

முன்பின் தெரியாதவருக்காக பிரார்த்தனை செய்த சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாக உள்ளது. சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50) ஏப்ரல் 13 அன்று காலை தீக்குளித்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராமல் சரவண சுரேஷ் ஏப்ரல் 14 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்குக் கொண்டு
சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்

உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை அமைத்திருக்கிறார். இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர்
சினிமா செய்திகள் நடிகை

நான் பாதுகாப்பாக இல்லை -நடிகை வரலட்சுமி கோபம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்….. நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே
சினிமா செய்திகள் நடிகர்

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது – ரஜினிகாந்த் வேதனை

சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தி…. உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள
சினிமா செய்திகள் நடிகர்

சுந்தர்.சி சொன்ன இரகசியம் – வெளிப்படுத்திய விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து