எப்படி சென்சார் கிடைத்தது? இருட்டு அறை படம் பார்த்தவர்கள் அதிர்ச்சி
ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர்,
இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்குப் படமாகப் பார்த்தால் பொழுது போக்குப் படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
என்று சொல்லியிருந்தார்.
இந்தப்படம் மிகவும் ஆபாசமாக எடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லப்பட்டதாலே அவர் இப்படி விளக்கம் அளித்திருந்தார்.
இந்தப்படம் அண்மையில் திரையிடப்பட்டது. அப்போது பார்த்தவர்கள், மிரண்டு போயிருக்கிறார்கள். இதுவரை யாரும் செய்யத்துணியாத செயலை செய்திருக்கிறார்கள். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. எல்லாமே ஒற்றை அர்த்தம்தான். அது மிகமிக ஆபாசமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறது. இந்தப்படத்துக்கு எப்படி தணிக்கைச் சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதுதான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் கேள்வி என்று சொல்கிறார்கள்.











