செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கமலின் விஸ்வரூபம் 2, தனுஷின் வடசென்னை ஆகிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்வாய்ப்பாக அவரை மையப்படுத்தியே ஒரு படம் தயாராகிறது.

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது, பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார்.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு அறிவழகன்,இசை அம்ரிஷ், படத்தொகுப்பு கோபிகிருஷ்ணா,கலை லால்குடி இளையராஜா, சண்டைப் பயிற்சி விக்கி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் நாஞ்சில்.

முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ள இந்தப்படம் க்ரைம் திரில்லர் வகைப் படமாக உருவாக உள்ளது.

Related Posts