September 22, 2026
சினிமா செய்திகள் நடிகர்

காலா பாடல்விழாவுக்கு இடமில்லை – ரஜினி கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதற்காக விழா எடுக்கப் போகிறார்களா? அல்லது இணையதளங்களில் வெளியிடப்போகிரார்களா? என்று சொல்லவில்லை.

என்ன நடக்கும்?

இணையதளங்களில் பாடலை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறர்கள். ஆனால், இயக்குநர் ரஞ்சித்தோ கபாலியிலும் பெரிதாகச் செய்யவில்லை, எனவே இம்முறை பெரிதாகச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

அதனால், இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நந்தனம் ஒய் எம் சி ஏ விளையாட்டு மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

திறந்தவெளி மைதானத்தில் விழா நடப்பதால் பெரிய கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ரஜினி படத்தின் விழாவை இப்படி திறந்தவெளியில் நடத்துவது ஏன் தெரியுமா?

இவ்விழாவை நடத்த முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கைக் கேட்டிருக்கிறார்கள்.. ரஜினி விழா என்பதால் தமிழக அரசு அந்த இடத்தைத் தர மறுத்துவிட்டதாம்.

இதனால் ரஜினி கோபமாகிவிட்டாராம். எனவே தனியாருக்குச் சொந்தமான ஒய் எம் சி ஏ வை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

நேரு விளையாட்டரங்கைக் கொடுக்காத கோபத்தைப் பாடல் வெளியீட்டுவிழாவில் பேசும் போது ரஜினி வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Related Posts