சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 70 இலட்சம் கொடுத்தாரா? – உதவியாளர் ட்வீட்டால் சர்ச்சை

கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உலகெங்குமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்திலிருந்தும் அரசாங்கம் உட்பட ஏராளமானோர் உதவி செய்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகமும் உதவி செய்து வருகிறது.

விக்ரம்,கமல்,விஜய்சேதுபதி,சூர்யா, ரஜினி உட்பட முன்னணி நடிகர்கள் உதவினார்கள்.

விஐய்யும் அஜித்தும் உதவி செய்யவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில்,நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி. கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.3 லட்சம் வீதம் விஜய் நிதியுதவி அளித்துள்ளார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

என்றும் செய்தி வெளியானது.

விஜய்யின் உதவியாளர் என்று சொல்லப்படுகிற ஜெகதீஷ் என்பவர், தனது ட்வீட்டில், விஜய் அண்ணா கேரளாவிலுள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு காசோலை அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
அவர் தொகை எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விஜய் எவ்வளவு கொடுத்தார்? என்கிற விவாதம் தொடங்கி சர்ச்சையாகிறது.

விஜய் எது செய்தாலும் சர்ச்சையா?

Related Posts