த்ரிஷா பற்றிய அறிவிப்புக்குப் பின் ரஜினி விஜய் ரசிகர்கள் கடும் மோதல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாகத் தகவல்.
இந்த நிலையில் படத்தில் ரஜினியுடன் த்ரிஷா இணைய இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டரில் இந்தத் தகவலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்தவுடன்,
யோவ் இதுலாம் எங்களுக்கு வேண்டாம் Sarkar அப்டேட் இருந்தா மட்டும் வா
என்று விஜய் ரசிகர் ஒருவர் பின்னூட்டம் இட்டார். உடனே ட்விட்டர் அதிரத் தொடங்கியது.
ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றனர். தகாத சொற்கள் தாராளமாகப் புழங்குகின்றன.
சன் பிக்சர்ஸ் வித் சர்கார், சன் பிக்சர்ஸ் வித் ரஜினி ஆகிய தலைப்புகளில் வாக்கெடுப்பும் நடக்கின்றன.
விஜய்யே நான் ரஜினி ரசிகன் என்று சொன்னாலும் அவருடைய ரசிகர்கள் ரஜினியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.












