September 29, 2026
Home Articles posted by cadmin (Page 108)
செய்திக் குறிப்புகள்

தலைவாழை இலை விருந்து கங்குவா – சூர்யா பெருமிதம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 26.10.2024 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு
சினிமா செய்திகள்

பிரதர் படம் தள்ளிப்போகிறதா? – என்ன நடந்தது?

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள படம் பிரதர்.ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சினிமா செய்திகள்

மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு – பொங்கலுக்கு வருமா?

நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.அதேநேரம்,அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று
விமர்சனம்

ஐந்தாம் வேதம் – இணையத் தொடர் விமர்சனம்

இந்து மதத்தில் ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ ஆகிய நான்கு வேதங்கள் இருக்கின்றன.இந்நிலையில் இன்னொரு வேதம் அதாவது ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படிப் பட்டவை? என்கிற கற்பனையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஐந்தாம் வேதம். ஒரு பழமையான ஆலயத்தில் இரகசிய இடத்தில் அந்த வேதம் இருக்கிறது.அது வெளிவரக் காத்திருக்கிறார் அக்கோயில்
விமர்சனம்

தீபாவளி போனஸ் – திரைப்பட விமர்சனம்

அன்றாட வாழ்வின் சலிப்பான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் நாட்கள் பண்டிகை நாட்கள்.அவை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடுவதில்லை.பணக்காரர்களுக்குக் கொண்டாட்டமாகவும் ஏழைகளுக்குத் திண்டாட்டமாகவும் மாறிவிடுகின்றன என்பதை நெஞ்சம் நெகிழும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் தீபாவளி போனஸ். கணவன் மனைவி ஒரு குழந்தை என அளவாக வாழும் தம்பதியர் விக்ராந்த் ரித்விகா
செய்திக் குறிப்புகள்

அண்ணாமலை ரஜினி போல் லக்கிபாஸ்கர் துல்கர் – இயக்குநர் தகவல்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’லக்கி பாஸ்கர்’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று அதாவது, 31 அக்டோபர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி
சினிமா செய்திகள்

பிக்பாஸில் கவின் விளம்பரங்களில் முந்தும் ப்ளடிபெக்கர் – விவரம்

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஜெயம்ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.இவற்றோடு துல்கர்சல்மான் நடித்துள்ள மலையாளப்படமான லக்கிபாஸ்கர் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படங்களை விளம்பரப்படுத்தும் பணிகளும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணிகளும் தற்போது
சினிமா செய்திகள்

விஜய் 69 க்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் – புதிய தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தற்காலிகமாக ‘விஜய் 69’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 அன்று தொடங்கியது. விஜய் அரசியல்கட்சி தொடங்கி இருப்பதால் இந்தப்படம்
சினிமா செய்திகள்

இராகவா லாரன்ஸின் பென்ஸ் படம் கைவிடப்பட்டது?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
செய்திக் குறிப்புகள்

இனி இருக்காது இடைவெளி – கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 ஆவது படத்தின் துவக்க விழா இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்தப்படத்தை,டான் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். இப்புதிய படத்தின் தொடக்க விழாவில் கழுகு படத்தின் இயக்குநர்