மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.அசோக்
ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால்
மறைந்த அப்துல்கலாம் பதினாறு வயதான கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல் தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட் டிரைவர். விண்வெளி விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருக்கும் பிரபா, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறார்.அவருடைய ஏழ்மை நிலையால் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது.அதனால்
ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் பிளாக் படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாகப் பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறும் மேஜிக்கையும் பிளாக் படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களைத் தயாரித்து
கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அக்ஷயா ஹரிஹரன்,அனார்கலி நாசர்,மாருதி பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜென்
கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத்
காதலுக்காகப் போற்றப்படும் காத்தவராயன் ஆரியமாலா கதையின் தற்கால வடிவமாக வந்திருக்கும் படம் ஆரியமாலா. கிராமமொன்றில் வசிக்கும் நாயகி மனிஷாஜித் கனவில் கண்ட நாயகனை நிஜத்திலும் பார்க்கிறார்.காதல் கொள்கிறார்.காத்தவராயன் கூத்து கட்டும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்குக்கும் நாயகி மீது காதல் வருகிறது.நாயகியிடம் காதலைச் சொல்கிறார்.அவரும் ஏற்றுக் கொள்வார்.சுபமுடிவாக இருக்கும் என்று
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா.சூர்யா 44 என்றழைக்கப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவின் 45 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று






















