விஜய்ஆண்டனியின் புதிய படம்
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன.
இவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படமும் இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டு கடைசிநேரத்தில் கைவிட்ட ஒரு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குநர் தனா இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப்போவதாகவும், அந்தப்படத்தை ராஜவம்சம்,கோடியில் ஒருவன் உட்பட சில படங்களைத் தயாரித்த டிடி.ராஜா தயாரிப்பதாக இருந்தது.
இப்படத்தின் கடந்த ஜூன் மாதம் முதல்வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் அப்படத்தை விட்டுவிட்டு, சுசீந்திரனின் வள்ளிமயில் படத்துக்குப் போனார் விஜய் ஆண்டனி.
தனா இயக்கும் படத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் களையப்பட்டுவிட்டதாம்.அதனால், இப்போது மீண்டும் அந்தப்படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம்.
2023 சனவரியில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.
அதே தயாரிப்பாளர் அதே இயக்குநர் அதே கதாநாயகன் ஆறு மாதங்கள் கழித்துத் தொடங்கவிருக்கிறது. அவ்வளவுதான்.











