விஷால் பற்றி இப்படி ஒரு செய்தி
விஷால் பற்றி இப்படி ஒரு செய்தி. நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அப்படி என்ன செய்தி?
விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு சென்னை அடையாறில் ஒரு உயர்தர மதுக்கூடம் இருக்கிறதாம்.
அடிக்கடி அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் விஷாலுக்கு உண்டாம். வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் அவருக்குக் கடன் வசதி கொடுக்கப்பட்டதாம்.
அதைப்பயன்படுத்திய விஷால் பல இலட்சங்கள் கடன் வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்த மதுக்கூடத்தின் நிர்வாகத்தை பிரிட்டோவின் மகள் இயக்குநர் சினேகாவும் மருமகனான அதர்வாவின் தம்பி ஆகாஷும் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்திருக்கிறது.
அவர்களுடைய வசதிக்காக நிர்வாக மாற்றம் நடந்திருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றவர், பழைய பாக்கிகளைப் பற்றிய விவரம் திரட்டியபோது விஷால் வைத்துள்ள கடன் தெரிய வந்திருக்கிறது.
உடனே அவரைத் தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார்கள். ஒருமுறை இருமுறை என்று தொடங்கி பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுத்தபாடில்லை. அதுமட்டுமின்றி கடைசியாக நான் சினேகாவிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் மேற்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறுகிறார்களாம்.
ஒரு படத்துக்கு சுமார் பதினைந்து கோடி அல்லது அதற்கும் மேல் சம்பளம் வாங்கும் விஷாலுக்கு அந்தத் தொகையெல்லாம் ஒரு தொகையே கிடையாது. போகிற போக்கில் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் அப்படிச் செய்யாததால் வெளியே சொல்லிப் புலம்பும் அளவுக்கு நிர்வாகம் வந்துவிட்டது.
இதையெல்லாம் கணக்குப் போட்டுக் கேட்கிறார்களே? என்று விஷால் நினைத்தாரா? அல்லது நான் யார் தெரியுமா? என்னிடமே பணம் கேட்பதா? என்கிற கவுரவம் பார்க்கிறாரா? என்று தெரியவில்லை.
ஆனால், இந்தச் சிக்கல் அந்த மதுக்கூடத்தைத் தாண்டி, திரைத்துறையினர் விஷால் இப்படிச் செய்துவிட்டாராமே? என்று பேசிக்கொள்கிற அளவுக்குப் போயிருக்கிறது.












