சினிமா செய்திகள்

22 கோடி திருப்பித் தர வேண்டும் – கலங்க வைக்கும் காலா கணக்கு

காலா ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி படத்துக்கான வரவேற்பு இவ்வளவு குறைவாக இருந்தது இந்தப்படத்துக்குத்தான் என்று சொல்லுமளவுக்கு திரையரங்குகளில் கூட்டம் இல்லை.

இன்று கோலிசோடா2 படம் உட்பட சில படங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் காலா படத்தின் வசூல் நிலவரம் என்ன? என்று வர்த்தகர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னவற்றின் தொகுப்பு…

இந்தப்படம் சேலம், திருச்சி ஆகிய விநியோகப் பகுதிகள் தவிர மற்ற எல்லாப் பகுதிகளும் டிஸ்டிரிபியூசன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

படத்தின் வசூல் குறைவு என்பதால் சேலமும் திருச்சியும் கூட டிஸ்டிரிபியூசன் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படி வைத்து கணக்கு பார்த்தால் சுமார் 62 கோடி ரூபாயை முன் தொகையாகப் பெற்றிருக்கிறார்கள். இதில் இதுவரை ஆன வசூல் இன்னும் சில நாட்கள் வசூல் ஆகியனவற்றைச் சேர்த்தாலும் சுமார் 40 கோடிதான் பங்கு வரும்.

எனவே விநியொகஸ்தர்களிடமிருந்து வாங்கிய தொகையில் சுமார் 22 கோடியை திருப்பித் தரவேண்டி வரும் என்கிறார்கள்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் சோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts