சிவகார்த்திகேயன் இப்போது ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல்வேறு காரணங்களால்
தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கோயம்புத்தூரில் இருந்த சமயத்தில் முன்னறியா எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு மூன்று நாட்களாக அடிக்கடி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஜான்சுந்தர் அண்ணனின் ‘டமருகம்’ சார்ந்த வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம். புதுநண்பர்களைச் சந்திப்பதற்கான தகுந்த மனநிலை அமையாததாலும், சினிமா சார்ந்த தோழர்களை எதிர்கொள்வதில் ஒருசில
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு 16.12.2019 தேதியிட்டு எழுதிய கடிதம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன் விவரம்…. 16.12.2019 தேதியில் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதத்தில்
மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. எங்கள் மகிழ்வான வணக்கம். எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும்
பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு. இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்




















