சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை

சிவகார்த்திகேயன் இப்போது ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 36 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கான பரிசாக டாக்டர் படத்தின் முதல்பார்வையை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப்படத்தின் முதல்பார்வை வெளியானதைத் தொடர்ந்து அதை மிக உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

Related Posts