சினிமா செய்திகள்

டிசம்பரில் தொடங்கும் ஐந்து பெரிய படங்கள்

இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன. 

அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி கல்ந்து கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவை தவிர, ஹரி இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் தொடங்கவிருக்கிறதாம்.

அதோடு, வினோத் இயக்கத்தில் அஜீத்  நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12. அன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஐந்தும் பெரிய படங்கள் என்பதால் இம்மாதம் திரைப்பட ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Posts