சினிமா செய்திகள்

வெறுப்பைக் கக்கிய அஜீத் ரசிகர்கள் அன்பைக் கொட்டிய விஜய் ரசிகர்கள் – ட்விட்டர் பரபரப்பு

அடிக்கடி விஜய் அஜீத் ரசிகர்கள் சண்டை நடக்கும். அதுவும் சமூக வலைதளங்கள் பிரபலமானதும் அது அதிகமாகிவிட்டது.

ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் நல்ல நாளில் விஜய்யைப் பற்றி இப்படிச் சொல்லலாமா? எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

அவர்களோ, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்கிற குறளுக்கு ஏற்ப, அஜீத் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்க #LONGLIVEAJITHSIR என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப் படுத்தினர்.

இதைச் சற்றும் எதிர்பாராத அஜீத் ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.

இதனால் இப்போது #ThalapathyBDayCDP என்கிற சொல் மட்டும் டிரெண்டிங்கில் உள்ளது.

Related Posts