சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 14 படத்தின் பெயர் அறிவிப்பு

இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பல்வேறு காரணங்களால் தாமதமான இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்துக்கு அயலான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெயர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Posts