சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படத்தின் பெயர் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் தொடங்கும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியிருந்தார்கள். அதன்படியே தீபாவளியன்று படத்தை வெளியிட உறுதியாக இருக்கிறார்களாம்.

அதற்கு முன்னோட்டமாக ஜூன் 22 விஜய் பிறந்தநாளையொட்டி, படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை ஜூன் 21 மாலை ஆறு மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் பெயர் அதிகாரம். இதைத்தான் இன்று மாலை அறிவிக்கவிருக்கிறார்கள்.

Related Posts