விஜய் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை பெயர் வைக்கப்படாமல், தளபதி 62 என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்தது. விஜய்க்கு நாளை பிறந்தநாள், இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படத்திற்கு சர்கார் என பெயரிட்டுள்ளனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பது படத்தின் தலைப்பிலேயே தெரிகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டடங்களின் இரவு மின்னொளியில் ஸ்டைலாக புகைப்பிடித்தபடி விஜய் தோன்றுகிறார்.
இதுவரை இல்லாத மாதிரி பெரிய பூசை வைத்திருக்கிறார்.