சினிமா செய்திகள்

சூர்யாவை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது – கே.வி.ஆனந்த் சொல்லும் காப்பான் அனுபவங்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்…..

காப்பான் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானதுதான். நமது தேசியப் பாதுகாப்புப் படையின் அங்கமான சிறப்புப் பாதுகாப்புக் குழுவைப் பற்றிய ஆராய்ச்சியின் போது திரட்டப்பட்ட தகவல்கள், கதைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. இதை வைத்து ஏன் படம் எடுக்கக்கூடாது? என்று நினைத்தேன்.

பிரதமருக்குப் பக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்குபவர்கள் இவர்கள். குண்டடிபட சம்பளம் பெறுபவர்கள். இவர்களுக்குள் ஒரு ஒற்றன் இருந்து, அவன் பிரதமரைக் கொல்ல நினைத்தால் என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் கரு.

கற்பனையான ஒரு பிரதமர் கதாபாத்திரம் இருக்கும் ஒரு கற்பனைப் படம் தான் இது. சில நிஜ சம்பவங்களை உங்களுக்கு இந்தப் படம் ஞாபகப்படுத்தலாம். ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை

சூர்யா இப்போது அதிக சமூக உணர்வுடன் இருக்கிறார். மேலும் சரியான விஷயங்களைச் சொல்வது குறித்து தற்போது வற்புறுத்துகிறார். பெண்களைக் கிண்டல் செய்யும் ஒரு வசனம் இருந்தால் அதைப் பேசத் தயங்குகிறார். சில காட்சிகள் அவரை அசவுகரியமாக்கின. இது சூர்யா அல்ல, அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என நான் அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது

இவ்வாறு கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

Related Posts