பிக்பாஸில் கழன்று விழும் கமலின் முற்போக்கு முகமூடிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மீது லாஸ்லியா காதல் வயப்பட்டிருப்பதற்கு “இது போட்டித்தளம்; சுற்றுலாத்தளம் அல்ல” என்று லாஸ்லியாவை அவமானப்படுத்துகிறார் கமல்.
காதலில் மட்டுமே வாழ்ந்து காதல்களை எப்போதும் கொண்டாடி வந்திருக்கும் கமல்.
தன் இணையரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மதம் மாறவும் மகள்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து சிறந்த தந்தையாக… முற்போக்காளராக காண்பித்துக்கொண்ட கமல்… ஒரு பெண்ணின் காதலை இப்படி அவமானப்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கமலின் முற்போக்கு முகமூடிகள் எல்லாம் பிக்பாஸ் மூலம் பிக் ஃபெயில் ஆகிக்கொண்டிருக்கிறது.
இடம் பார்த்து வருவதா காதல்? காதலுக்கு சுற்றுலாத் தளமா? போட்டிக் களமா? புண்ணியஸ்தலமா? பாவஸ்தலமா? கல்விக்கூடமா? பக்திக்கூடமா? சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா? அல்லது மிலிட்டரி ‘ஷூட்டிங்’ ஸ்பாட்டா? என்பதெல்லாம் தெரியாது.
யுத்த களத்திலும் முத்தம் கொடுக்கும் காதல். உயிரை வதைப்பதாக சொல்லப்படும் நரகத்திலும்கூட உருவாகும் உயிர் கொடுக்கும் காதல். எரிமலையிலும் துளிர்விடும் காதல். பனிச்சிகரத்திலும் பற்றி எரியும் காதல்.
எப்போது… எந்த இடத்தில்… யார்மீது… காதல் வரும் என்று சொல்லவே முடியாது; சொல்லவும் கூடாது. காதல் புனிதமும் அல்ல; புரட்சியும் அல்ல. இடம் பார்த்து… நேரம் பார்த்து… மலர்வது காதலும் அல்ல.
காதல் வயப்பட்டிருக்கும் “லவ்ஸ்” லியாவிற்கு வாழ்த்துகள்
– வினிசர்பனா











