பிகில் கதை திருட்டு வழக்கில் ஏஜிஎஸ் பொய் சொல்கிறது – கொதிக்கும் கே.பி.செல்வா
இன்று காலை, நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி என்ற தலைப்பிட்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…..
தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.
இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள். இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.
கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.
இவ்வாறு ஏஜிஎஸ் நிறுவனம் கூறியிருந்தது.
இது குறித்து வழக்குப் போட்ட கே.பி.செல்வா கூறியிருப்பதாவது….
அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல!!
அவங்க சொன்னதெல்லாம் “copy right கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க” அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க,
செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு , அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல withdraw pettition file பண்ண !! அதுக்கு judge அத accept பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !!
இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் file பண்ண போறேன்.
ஆனா இதுக்கு நடுவுல Ags தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் widhdraw pettition file பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !!
நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !! நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !!
இப்படிக்கு
K. P. செல்வா
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











