செய்திக் குறிப்புகள்

காஜல் அகர்வால் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியிருக்கிறது.நான்கு மொழிகளிலும் மீடியண்ட் பிலிம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார்.

தமிழில் தயாராகியிருக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.தமிழில் வசனங்களை திமுக பாராளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கிறார்.

இப்படம், தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கன்னடத்திலும், மலையாளத்திலும் தணிக்கைச் சான்று கிடைத்த நிலையில் தமிழில் தயாரான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு பல ஒலி,ஒளி வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது தணிக்கைத் துறை.

மற்ற மொழிகளில் அப்படியே விட்டு விட்டு தமிழில் மட்டும் பல வெட்டுகளா? என்று அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்துச் செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

ஒரே படம் அதற்கு கேரளாவிலும் கர்நாடகத்திலும் வெட்டு இல்லை தமிழில் மட்டும் வெட்டுகள் என்பதால் தணிக்கைத்துறை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

Related Posts