செய்திக் குறிப்புகள்

தான் இயக்கிய படவிழாவில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசை, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்கிறார். ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கம் மேற்கொண்டிருக்கிறார்.

இப்படம் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் 11-02-25 அன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலை இயக்குநர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

முதலாவதாக வுண்டர்பார் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் வரவேற்றுப் பேசும்பொழுது….

தனுஷ் அவர்களின் ‘துள்ளுவதோ இளமைக்கு எப்படி ஆதரவளித்தீர்களோ, அதே போல இந்த இளம் நடிகர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஜிவி பிரகாஷ் குமார் பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையைத் தந்து இந்தப் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். தனுஷ் அவர்களின் நட்பிற்காக வந்து சிறப்பித்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது…

படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது; தனுஷ் அவர்கள் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குநராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்பொழுது….

தனுஷ் அவர்கள் எப்படி இவ்வளவு விரைவாக அடுத்தடுத்த படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என்று பரபரப்பாக இருப்பதனால் ஒரு மகா கலைஞனாக விளங்குகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்தினார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசும்போது….

இளம் திறமையாளர்களுக்கு எப்பொழுதும் ஆதரவளிப்பவர் தனுஷ் அவர்கள். இந்த படக் குழுவும் அப்படியே உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என பேசினார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசும்பொழுது….

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்துவிட்டு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார். அதேபோல ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பேசப்படக்கூடிய மற்றும் ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும் எனக் கூறினார். அவர் கூறியபடி அனைத்தும் நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் அருண் விஜய் வாழ்த்திப் பேசும் பொழுது…

சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். இளைஞர்களைக் கவரும் விதத்தில் ஜிவி பிரகாஷ் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் பொழுது…

நடிகர் தனுஷ் அவர்கள் என்னை அவரது அம்மாகவே நினைப்பவர். படத்தில் நடிக்கும் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். இன்றும் என்னிடம் ‘நாயகன்’ திரைப்படத்தைப் போல ‘விஐபி’ திரைப்படத்தை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல எனக்கு இந்தத் திரைப்படமும் படக்குழுவும் சிறப்பாக அமைந்தது எனக் கூறினார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்பொழுது….

தனுஷ் அவர்கள் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், பாடலாசிரியர்விவேக், கலை இயக்குநர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி மற்றும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்த பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தையும், இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த தனுஷுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து படத்தின் இசை வெளியிடப்பட்டு, குழு புகைப்படத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான தனுஷ் கலந்துகொள்ளவில்லை.ஏனென்றால்? கதாநாயகன் உட்பட பல புதியவர்கள் அறிமுகமாகும் மேடையில் நான் வந்து பேசினால் எல்லோரும் என்னைத்தான் கவனிப்பார்கள் என்று சொன்னதோடு புதியவர்கள் கவனம் பெற வேண்டும் என்பதால் விழாவுக்கு நான் வரவில்லை என்று அவர் கூறிவிட்டாராம்.

Related Posts