சினிமா செய்திகள்

தீக்குளித்து நிரூபிப்பேன் – படைப்பாளி பார்த்திபன் உறுதி

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அதன்மூலம் தன் கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், ரசிகர்களுடன் உரையாடவும் செய்பவர்.

அவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் ஒத்த செருப்பு 7 என்கிற படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில்,

அணைப்பிற்கு அழைப்பு!

ரசிகர்களின் அரவணைப்பிற்கு!
நான் என்னையும் ரசிகர்களையும் தான் நம்புகிறேன்.ஆனால் சினிமா வியாபாரம் ‘ஒத்த செருப்பு’ போன்ற புத்தம் புதிய முயற்சிகளை (நியாயமான) சந்தேகப் பார்வையுடனே பார்க்கிறார்கள்!
தீக்குளித்து நிரூபிப்பேன் அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும்!

என்று பதிவிட்டிருக்கிறார்.

ஒரு படைப்பாளியின் கடும் வேதனை இப்பதிவில் வெளிப்படுகிறது.

Related Posts