சினிமா செய்திகள்

இழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யவர்மா படம் வெளீயாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இதற்கிடையே துருவ்விக்ரமுக்குப் பல இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் பரியேறும்பெருமாள் பட இயக்குநர் மாரிசெல்வராஜ் சொன்ன கதை விக்ரம் துருவ்விக்ரம் ஆகிய இருவருக்கும் பிடித்திருந்ததாம்.

துருவ்வின் இரண்டாவது படமாகவே அதை எடுக்க நினைத்திருந்தார்களாம். கொரோனா வந்து எல்லாவற்றையுல் கலைத்துப்போட்டுவிட்டது.

அதனால் கார்த்திக் சுப்புராஜ் படம் இரண்டாவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

மாரிசெல்வராஜ் படம் துருவுக்கு மூன்றாவது படமாக அமையவிருக்கிறது.

மாரிசெல்வராஜிடம் கதைகேட்டு மாதக்கணக்காகியும் அதுகுறித்த அறிவிப்பு வராமல் இருக்கக் காரணம், அந்தப்படத்தின் தயாரிப்பாளர் யார்? என்பதை முடிவு செய்வதில் இழுபறி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

துருவை வைத்துப் படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தயாரிப்பில் படத்தை எடுக்கலாம் என்று விக்ரம் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

ஆனால், பரியேறும்பருமாள் படம் இயக்கும்போதே பா.இரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு படம் இயக்க மாரிசெல்வராஜ் ஒப்பந்தம் போட்டிருந்திருக்கிறார்.

தனுஷ் படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அங்கு போனார் மாரிசெல்வராஜ். அப்போதே அடுத்த படம் பா.இரஞ்சித் தயாரிப்பில் இயக்குவதாக முடிவானதாம்.

இப்போது விக்ரம் தரப்பு வேறொரு தயாரிப்பாளரைச் சொன்னதால் சிக்கல் ஏற்பட்டதாம். பல்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பா.இரஞ்சித் தயாரிப்பில் இந்தப்படத்தை எடுக்க அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டனராம்.

இதனால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.

Related Posts