சினிமா செய்திகள் நடிகர்

விடுதி அறையை மாற்றச்சொன்ன நிர்வாகம் கடுப்பான அஜித்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்,நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன.

அத்துடன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு, வருகிற 27-ந் தேதி முதல் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் அஜித்குமார் தங்கியிருந்தபோது, ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம்….

‘விசுவாசம்’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற அஜித்துக்கு அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. சில காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் 2 நாட்கள் தேவைப்பட்டது.

அதனால் அஜித் தங்கியிருந்த அறையில், மேலும் 2 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்படி, ஓட்டல் நிர்வாகியிடம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி கேட்டார்.
ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்த அறை 11-ந் தேதி முதல் இந்தி நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஓட்டல் நிர்வாகி தெரிவித்தாராம்.

விசயத்தைக் கேள்விப்பட்ட அஜித் கடுப்பாகிவிட்டாராம்.
ஒரு சின்ன விசயத்தைக்கூட முன்கூட்டியே பார்க்கமாட்டீர்களா? என்று படக்குழுவினரைத் திட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடைசியில் என்ன ஆச்சு? வேறுவழி, வெறொரு அறையில் அஜித் தங்கவைக்கப்பட்டாராம்.

Related Posts