சினிமா செய்திகள் நடிகர்

ஹீரோயிசத்தை உடைத்த ரஜினி மிகப்பெரிய நடிகர்

எழுத்தாளர் கார்முகிலின் காலா பற்றிய பார்வை….

காலா பார்த்தேன்.
ரஞ்சித் பெரிய ஆள்.

பெண் பாத்திரங்கள் அற்புதம். உருவிய சுடிதாரை எடுக்காமல் கட்டையை எடுக்கும் பெண்ணை மறக்க நாளாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் கருப்பு, சிகப்பு, நீல வண்ணங்களின் எழுச்சி அருமையான கலாப்பூர்வம். எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் ஒரு ஹீரோ படத்தில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ், இவ்வளவு பாத்திரங்கள்.

இதற்கெல்லாம் இடமளித்து ஹீரோயிசத்தை உடைத்த விதத்தில் ரஜினி மிகப்பெரிய நடிகர்.

ரஞ்சித்துக்கு கமர்ஷியல் பிரமாதமாக வருகிறது. போலீஸ் ரஜினியை விசாரிக்கும் ‘குமாரு யார்ரா இந்த ஆளு’ என்கிற ஒரு இடமே அதற்கு உதாரணம். (கபாலியில் தினேசை கொள்ளும் காட்சி).

முக்கியமானது… இதை தலித் சினிமா என சுருக்கிப் பார்க்க முடியவில்லை. குடியைப் பற்றிக் கூட படம் பேசுகிறது.

அரசியலை கலைத்தன்மையோடு பேசுகிற அரிதான படங்களில் இது முக்கியமானது. காரணம் விவாதத்தைக் கிளப்புகிறது. வெளியே வரும்போது நடிகர் நடிகைகளை மறந்து பிரச்சனையை மனதில் யோசிக்க வைக்கிறது. எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா வசனங்கள் முக்கியமானவை.

Related Posts