கதாநாயகியானார் லாஸ்லியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம்.
ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில்தான் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த தமிழீழம் கிளிநொச்சியைச் சேர்ந்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
லாஸ்லியா நாயகியாக நடிக்கும் “பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் 2020 கோடைவிடுமுறையில் பிரமாண்டமாக திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதனால் உலகெங்கும் உள்ள லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.