முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்
தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன்.
அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார்.
சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது.
2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இப்போது, இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்கள் நேரடியாக மோதுகின்றன.
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படம் பெரிய வெற்றி, அதே போல் தனுஷின் அசுரன் படமும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இரண்டு வெற்றி நாயகர்களின் படங்களும் ஒரேநாளில் வெளியாகவிருப்பதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











