ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
சினிமா
நடிகர் சூர்யாவும்,நடிகர் கார்த்தியும் இணைந்து அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கிப் படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர். தற்போது இலவசக் கல்வி வழங்கத் தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம்
இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி சிம்ரன் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த பேட்ட படம், பொங்கல் நாளையொட்டி சனவரி 10 அன்று வெளியானது. அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பெரிய அளவில் வசூலும் செய்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளமையான ரஜினியைப் பார்க்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தப்பட வெற்றி காரணமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை
கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் கமல் ஷங்கர் கூட்டணியில்’இந்தியன் 2′ படம் உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18, 2019 அன்று சென்னையில் தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
பேட்ட படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கான கதையை ரஜினிகாந்திடம் கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில்
பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் வர்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. 2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் ஈ 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்….., அர்ஜுன்
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. எல்லோரும் ஓவியாவைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் போன்றோர் புகைபிடிப்பது போல் நடித்தால் தப்பு என்றால் ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம்























