சினிமா செய்திகள்

அஜீத் பட முதல்பார்வையில் முதல்மாற்றம்

சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜீத்தின் 59 ஆவது படத்தை இயக்கிவருகிறார்.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப்படம் ‘பிங்க்’. அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது.

நிரவ்ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல்பார்வையை படக்குழு மார்ச் 4 இரவு வெளியிட்டுள்ளது.

அஜீத் நடிக்கும் படத்தின் முதல்பார்வை என்றால் அஜீத் மட்டும்தான் இருப்பார். ஆனால் இந்தப்படத்தின் முதல்பார்வையில் அஜீத்தோடு படத்தின் நாயகிகளும் இடம்பிடித்திருக்கிறார்கள்.இது முதல்முறை என்று சொல்கிறார்கள்.

Related Posts