ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு தொடங்கும் நாள் இதுதான்
பேட்ட படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறதாம். பெரும்பகுதிப் படப்பிடிப்பு அங்கேயே நடக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.











