செய்திக் குறிப்புகள்

பிச்சைக்காரனை அடுத்து சசி இயக்கும் படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சொல்லாமலே படத்தில் தொடங்கி பிச்சைக்காரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்துபவர் இயக்குநர் சசி.

இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார்.

அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு பிரசன்னா எஸ் குமார்,இசை சித்து குமார் (அறிமுகம்),படத்தொகுப்பு ஷான் லோகேஷ்,
கலை மூர்த்தி,பாடல்கள் மோகன் ராஜன்,தமயந்தி,சண்டைப்பயிற்சி சக்தி சரவணன்

தமிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான
ரமேஷ் பி பிள்ளை இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்.

Related Posts