தனுஷ் நடிக்கும் கலாட்டா கல்யாணம் – விரைவில் வெளியீடு
ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் மூன்றாவது இந்திப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியவர்.
அட்ராங்கி ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாரா அலிகான் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘அட்ரங்கி ரே’ படத்தின் கதையை ஹிமான்ஷு சர்மா எழுதியுள்ளார்.
படம் முழுமையாகி வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்படத்தைத் தமிழிலும் குரல்பதிவு (டப்பிங்) செய்து வெளியிடவிருக்கிறார்களாம்.
தமிழில் இந்தப்படத்துக்கு கலாட்டாகல்யாணம் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.1968 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் ஜெயலலிதா உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கலாட்டா கல்யாணம்.
தனுஷ் நடித்திருக்கும் இந்திப்படத்தின் கதைக்குப் பொருத்தமாக இந்தப் பெயர் இருந்ததால் அப்பெயரை வைத்திருக்கிறார்களாம்.
விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தனுஷ் நேரடியாக நடித்த தமிழ்ப்படம் மாறன். இணையவெளியீட்டுக்குப் போய்விட்டதால் அதை ஈடுகட்டும்விதமாக இந்திப்படத்தைத் தமிழாக்கி திரையரங்குகளில் வெளியிடுகிறார்களாம்.











