சினிமா செய்திகள்

ஜெய்பீம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை ஏன்?

நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியான  ஜெய்பீம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், பல்வேறு சர்ச்சைகளுக்கும் உட்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த படமென்றாலும் இன்னும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகாமல் இருக்கிறதாம்.

ஏன்?

இப்படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விலையைப் பன்மடங்கு உயர்த்திச் சொல்கிறதாம் படநிறுவனம்.

அதனால், படத்தை வாங்க முன்வந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன என்கிறார்கள். 

ஆனால், தணிக்கைத்துறையின் ஏ சான்றிதழ் படத்திர்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக மறுதணிக்கை செய்ய வேண்டியிருக்கிறதாம். 

அதற்கான வேலைகள் தாமதமாவதால்தான் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஒப்பந்தம் செய்வது தாமதம் ஆகிறது என்கிறார்கள்.

என்ன காரணம்? என்றாலும் இன்னும் எந்தத் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது மட்டும் உண்மை.

Related Posts