சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் நாடகமேடை பட அறிவிப்புக்குக் காரணம் என்ன?

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ 2016 டிசம்பரில் வெளியானது. விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

கார்த்திக் நரேன் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் பிப்ரவரி 15,2018 மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார்.

படத்தின் பெயர் ‘நாடக மேடை ‘ இப்படத்தை இயக்கி
தன் ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங் , கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன்,நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார்.
அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்சத்திரக் கூட்டணியாக இருக்கும் என்கிறார்கள்.

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அடுத்த படத்தை அறிவிப்பது வியாபார யுக்தி என்பார்கள். கார்த்திக்நரேனும் அந்த யுக்தியைக் கடைபிடிக்கிறாரோ?

Related Posts