தனுஷ் உடன் இணையும் சசிகுமார்
தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதம் ஆனது. இப்போது அதன் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன,
இந்நிலையில் இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஒன்றில் சசிகுமாரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
வேடத்தின் முக்கியத்துவம் கருதியும் இயக்குநர் கெளதம் மேனனின் நட்புக்காகவும் அவர் நடிக்க ஒப்புக்கொள்வார் என்று சொல்கிறார்கள். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரலாம்.









