பராசக்தி படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது – என்ன காரணம்?
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்தில், சிவகார்த்திகேயனோடு ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.
இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.அதன்பின் இலங்கை சென்று சுமார் இருபது நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள்.
அங்கு சென்று வந்த பின் மீண்டும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
மார்ச் 30 முதல் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தார்களாம். ஆனால் இன்னமும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை.
ஏன்? என்னாச்சு?
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இயக்குநர் சுதா கொங்கராவின் நடவடிக்கைகளால் நாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஒரு காட்சியைப் படமாக்குவதற்கே அவருக்குத் தெரியவில்லை.தனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு வாங்கத் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது.
அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுக்கும் இயக்குநர் சுதா கொங்கராவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இலங்கை படப்பிடிப்பின்போது உடல்நலக் குறைவு காரணாமாக அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகுல் என்பவரை அனுப்பினார். உடல்நல்ம் தேறிய பிறகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகமே என்கிறார்கள்.
இந்தக் காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அதேநேரம், இப்போது திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு தொடங்காததற்கு தயாரிப்பு நிறுவனம் போதிய தொகையை விடுவிடுக்கவில்லை. அதனால்தான் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றொரு காரணம் சொல்லப்படுகிறது.
டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வசதியானவர் என்பதோடு சிவகார்த்திகேயன் நடிப்பதால் இந்தப்படத்துக்குப் பணம் புரட்டுவது சிரமமான விசயமாக இருக்க வாய்ப்பில்லை.எனவே பணம் வராததால் படப்பிடிப்பு நடக்கவில்லை என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் இயக்குநர் சுதா கொங்கரா மீதான அதிருப்தி படக்குழு முழுவதும் பரவியிருப்பதால் அவற்றைச் சரி செய்துவிட்டுப் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன,எல்லாக் கருத்து வேறுபாடுகளும் பேசித் தீர்க்கப்பட்டுவிடும்.அதன்பின் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.











