சர்கார் படத்துக்கு மிரட்டல் – சமாளிக்குமா திரையுலகம்?
சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்சின் சவாலை முறியடிப்போம் என, தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தை HD தரத்தில், இணையத்தில் வெளியிட உள்ளதாக, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைத்துறையை மிரட்டியுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ராக்கர்ஸை வெற்றி பெற விடாமல் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தை, தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
திரைப்படத்தை யாராவது படம்பிடிக்கிறார்களா என்பதை அறிய ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக படம் பிடிப்பவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுபவர்கள் இவ்வளவு தைரியமாகப் பேசும் நிலை வருத்தப்படவேண்டிய செய்தி.











