சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் பட பாடல்விழாவுக்கு வந்த சோதனை – விட்டுக்கொடுத்த அண்ணாச்சி

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம்.

லோகேஷ்கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம், ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளீயீட்டைப் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டனர்.எனவே, மே 15 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் இவ்விழா நடக்கும் என அறிவித்துள்ளனர்.

அதற்காக நேரு உள்விளையாட்டரங்கை ஒப்பந்தம் செய்வதற்காகப் போனபோது ஓர் அதிர்ச்சி காத்திருந்ததாம்.

அதே தேதியில் தன் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவை நடத்த ஒப்பந்தம் செய்திருந்தாராம் சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சி.

பதினைந்தாம் தேதி விழா என்றால் அதற்கு முந்தைய 13,14 ஆகிய இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தம் மூன்று நாட்கள் ஒப்பந்தம் செய்திருந்தாராம். முந்தைய நாட்களில் விழா முன்னோட்டம், பயிற்சி ஆகியவற்றிற்காக ஒப்பந்தம் செய்திருந்தார்களாம்.

தகவலறிந்து அதிர்ந்த கமல்ஹாசன், அவரிடம் பேசி எப்படியாவது அந்தத் தேதியை வாங்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.

அதன்பின் படக்குழுவினர் அண்ணாச்சியைத் தொடர்புகொண்ட பேச, பெரிய நடிகர் படம், ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படம் ஆகியனவற்றைக் கணக்கில் கொண்டு விட்டுக்கொடுத்துவிட்டாராம்.

அவருடைய படத்தின் விழா மே மாதக் கடைசிக்குச் சென்றுவிட்டதாம்.

Related Posts