December 6, 2024
சினிமா செய்திகள்

எனிமி நட்டம் – விஷாலின் புதிய படத்துக்குச் சிக்கல்

விஷால்,ஆர்யா நடிப்பில் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் உருவான எனிமி படம் தீபாவளி நாளில் வெளியானது. அந்தப்படம் சுமார் மூன்று கோடிக்கு மேல் நட்டத்தைச் சந்தித்துள்ளதாம்.

இதனால் விஷால் நடிப்பில் தொடங்கவிருக்கும் அடுத்த படம் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறதாம்.

எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.

விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

அவற்றிற்கடுத்து ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஷால்.

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தைத் தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்கிறார்கள்.

படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறது. தீபாவளி முடிந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், எனிமி படம் நட்டம் என்பதால் புதிய படத்துக்கு விஷால் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியாது, சம்பளத்தைக் குறைத்தாக வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.ஆனால், பேசிய சம்பளத்தைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம் விஷால்.

இதனால் அந்தப்படம் தொடங்குமா? என்பதே சந்தேகமாகிவிட்டதென்கிறார்கள்.

Related Posts