தனுஷின் புதிய படம் மார்ச் 6 இல் தொடக்கம்
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது.
தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு முன், இன்னொரு புதிய படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம் தனுஷ்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத அந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 6 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.
அப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கவிருக்கிறது. அதற்காகப் படக்குழுவினர் தயாராகிவருகின்றனர்.









