சினிமா செய்திகள்

சிம்பு பற்றிய ஹன்சிகாவின் ட்வீட்டால் பரபரப்பு

சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள்.

இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள்.

ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்‌ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.

காவி உடையில் ஹன்சிகா புகைபிடிப்பது போன்ற இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி எதிர்ப்பையும் பரபரப்பையும் கிளப்பியது.

இந்நிலையில் இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்எல் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்து சென்றது போல, இந்த படத்திலும் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் ஹன்சிகாவுடன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தத்தகவலை ஹன்சிகா உறுதிப்படுத்தியுள்ளார். அவர், நானும் சிம்புவும் மஹா படத்தில் இணைகிறோம் என்று சொல்லியிருப்பதோடு இரண்டு கைகள் இணைந்திருக்கும் படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

இதனால் படத்தில் மட்டுமா நிஜத்திலுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Posts