மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம்.கமல் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அறிமுக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தில்,
சினிமா
ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி
ஜூன் 3 ஆம் தேதி அமேசான் இணையத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 தொடரில், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் அத்தொடருக்கெதிராக தமிழகம் மற்றும் உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு அத்தொடரைத் தடை செய்யவும் அதில் ஈடுபட்டவர்களுக்குத்
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித்.
ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அவர் இல்லாத பகுதிகளின் படப்பிடிப்பு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்பு படத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் ஓரிரு
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். 2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்த
ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் அமேசானில்
தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பெயரும் முதல்பார்வையும் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22,2021) முன்னிட்டு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தப்படத்துக்கு பீஸ்ட் எனும் ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.விலங்கு எனப்பொருள்படும் ஆங்கிலப்பெயர் வைத்தது மட்டுமின்றி ஆங்கிலத்திலேயே அதை வெளியிட்டும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய எதிர்ப்புகள்





















