பிரபுதேவா இயக்கத்தில் சிம்பு ?
சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இவைதவிர மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவற்றிற்கிடையே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் சிம்பு. முதலில் அந்தப்படத்தை மிஷ்கின் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.மிஷ்கின் சம்பளம் மற்றும் மொத்தச்செல்வு அதிகமாக இருந்ததால் அது நடக்கவில்லை என்றார்கள்.
அதன்பின், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது. கே.வி.ஆனந்தின் எதிர்பாராத மரணம் காரணமாக அது தடைபட்டது.
அதன்பின், யாமிருக்க பயமே, கவலைவேண்டாம், காட்டேரி உள்ளிட்ட படங்களை இயக்கிய டீகே இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அது என்னவானது? என்று தெரியுமுன்பே, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் சிம்பு படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறார் என்றும் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.
பிரபுதேவா ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.











