சினிமா செய்திகள்

ஆகஸ்டில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு – சிம்பு அதிரடி

சிம்பு இப்போது மாநாடு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இதற்கடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல, கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பத்துதல படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே பல நாட்கள் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மாற்றத்துடன் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

மாநாடு படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் பத்துதல படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொள்வார் என்றார்கள். இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கெளதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.அதில் சிம்பு கலந்துகொள்கிறாராம்.

அதேநேரம், ஆகஸ்ட் 26 முதல் பத்துதல படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவும் வேலை நடந்துவருகிறது. அதிலும் சிம்பு கலந்துகொள்கிறார் என்கிறார்கள்.

ஆகஸ்ட் 5 இல் தொடங்கும் கெளதம்மேனன் படத்தில் பதினைந்திலிருந்து இருபது நாட்கள் வரை சிம்பு நடிப்பார் என்றும் அதன்பின் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளையும் வேகமாக நடத்தி முடிக்க சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்திருப்பதாகச் சொல்லப்படுவதால் இரண்டு படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts