October 16, 2026
செய்திக் குறிப்புகள்

பாடலாசிரியர் சினேகன் திருமணம் – நடிகையை மணக்கிறார்

திரைப்படப் பாடலாசிரியரும் அரசியல்வாதியுமான சினேகன், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு….

எனக்கும் , கன்னிகாவிற்கும்( இவர் நடிகை. சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்) வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ் நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது

எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

எப்போதும் போல உங்கள் நட்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

உங்கள்
வாழ்த்துக்களையும்
ஆதரவையும்
எதிர்ப்பார்க்கும்.

உங்கள்
கவிஞர் சினேகன்’

நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts