ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும், திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது. தங்கள் படத்தை வெளியிடச் சாத்தியமுள்ள தேதிகளை அக்குழுவிடம் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவேண்டும். அதன்பின், அந்தத் தேதியில்
சென்னை மாநகரில், நடுத்தர வர்க்கத்தினர் வாடகைக்கு விடு பிடிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். நள்ளிரவில் திடீரென வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம், வீட்டுச் சொந்தக்காரர் வெளியில் தூக்கிப் போட்டுவிட, அவறையெல்லாம் வாடகை வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு அதிலேயே போய் வீடு தேடுகிறது கிஷோர், லதாராவ் மற்றும் மூண்ரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.
தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா. ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது. கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின்
2017 இல் ஹரஹரமஹாதேவகி, 2018 மே மாதத்தில் இருட்டுஅறையில் முரட்டுக்குத்து ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சந்தோஷ்பிஜெயகுமார். இவ்விரு படங்களுமே வெற்றி என்ற போதும் அவை இரண்டுமே வயது வந்தவர்களுக்கான படம் என்பதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார். நாளை வெளியாகவிருக்கும் கஜினிகாந்த் அவருடைய மூன்றாவதுபடம். ஆர்யா, சாயிஷா, கருணாகரன்,சதீஷ் உட்பட பலர்
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும். அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம். இதையறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைச் சந்தித்தாராம். கதை
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது
திமுக தலைவர் கலைஞர்கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு
2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் எழுதி இயக்கியுள்ள படம் மரகதக்காடு. ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம்





















