சந்தோஷத்தில் சந்தோஷ்பிஜெயகுமார். எதனால்?
2017 இல் ஹரஹரமஹாதேவகி, 2018 மே மாதத்தில் இருட்டுஅறையில் முரட்டுக்குத்து ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சந்தோஷ்பிஜெயகுமார்.
இவ்விரு படங்களுமே வெற்றி என்ற போதும் அவை இரண்டுமே வயது வந்தவர்களுக்கான படம் என்பதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார்.
நாளை வெளியாகவிருக்கும் கஜினிகாந்த் அவருடைய மூன்றாவதுபடம்.
ஆர்யா, சாயிஷா, கருணாகரன்,சதீஷ் உட்பட பலர் நடித்திருக்கும் அப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருக்கிறது, கவலையை மறந்து வாய்விட்டுச் சிரித்தோம் என்றும் சொல்கிறார்கள். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசிக்கக் கூடிய நல்லபடம் என்று பாராடுகிறார்கள்.
இதனால் இந்தப்படமும் நிச்சயவெற்றி என்று உறுதியாகிவிட்டது.
தமிழில் இயக்கிய மூன்று படங்களுமே வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தோஷ்பிஜெயகுமார்.
இதுபோல் படமெடுத்தால் உங்களை எல்லோரும் கொண்டாடுவாங்க இயக்குநரே. இப்படியே தொடருங்கள்..











