கலைஞர் உடல்நலம் விசாரித்தார் விஜய்
திமுக தலைவர் கலைஞர்கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில்,இன்று காலை 11 மணி அளவில் நடிகர் விஜய், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரித்தார்.
கமல்,ரஜினி உள்ளிட்ட பலரும் வந்த நிலையில் விஜய்யும் அஜித்தும் வரவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.











